Users | DBMS - Part 02 (Tamil)

பொதுவாக வெவ்வேறு தேவைகளைக் கொண்ட வித்தியாசமான பயனர்கள் DBMS ஐ பயண்படுத்துவர் என்பதை பாகம் - 01 இன் இறுதிப் பகுதியில் அவதானித்திருந்தோம். அதன் தொடரில் மூன்று வகைகளாக வகைப்படுத்தப்பட்ட பயனர்கள் தொடர்பான மேலும் சிறு விளக்கத்தை இங்கு அவதானிப்போம்.







1. Administrators

தரவுத்தளத்தை பராமரித்தல் (maintain) மற்றும் நிர்வகித்தல் (administrating) என்பன இவர்களின் பிரதான பொறுப்பாகும். மேலும் அதன் பயன்பாட்டைக் கவனித்துக் கொள்வதும் (look after its usage), யாரால் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் இவர்களுடைய பொறுப்பாக இருக்கும்.
இதற்காக பயனர்களுக்கான அணுகல் சுயவிபரங்களை  (access profiles) உருவாக்குகின்றனர் மேலும் தனிமைப்படுத்தவும் (isolation), பாதுகாப்பை கட்டாயப்படுத்தவும் வரம்புகளைப் பயன்படுத்துகின்றனர்.
மேலும், கணினி உரிமம், தேவையான கருவிகள் மற்றுமு் பிற மென்பொருள் மற்றும் வன்பொருள் தொடர்பான பராமரிப்பு போன்றவற்றையும் இவர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.

2. Designers

          வடிவமைப்பளர்கள் எனப்படுவது தரவுத்தளத்தை வடிவமைக்கும்  பகுதியில் பணியாற்றும் நபர்களின் குழுவாகும்.

எந்த தரவை வைத்திருக்க வேண்டும், எந்தவடிவத்தில் இருக்க வேண்டும் என்பதை இவர்களே கண்கணிக்கிறார்கள். இவர்கள் நிறுவனங்கள், உறவுகள், கட்டுப்பாடுகள் மற்றுமு் பார்வையளர்களின் முழு தொகுப்பையும் அடையாளம் கண்டே வடிவமைக்கின்றனர்.

3. End-users

          இவர்கள் தான் உண்மையில் ஒரு DBMS வைத்திருப்பதன் பலனை அறுவடை செய்கிறார்கள். இறுதி பயனர்கள் பதிவுகள் அல்லது சந்தை விகிதங்களுக்கு கவனம் செலுத்தும் எளிய பார்வையாளர்கள் முதல் வணிக ஆய்வாளர்கள் போன்ற அதிநவீன பயனர்கள் வரை இருக்கலாம். 


(பகுjி - 03 இல் DBMS Architecture பற்றி அவதானிப்போம்.)


2 comments:

Powered by Blogger.