Database Management System - Part 01 (Tamil)

Database என்பது தரவுகளினுடைய தொகுப்பாகும். தரவு என்பது உண்மைகள், இலக்கங்கள் மற்றும் வடிவங்கள்  போன்றவற்றின் தொகுப்பாகும். தரவுகளானது முறைமை (Process) செய்யப்படுவதன் மூலம் தகவல்களாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு முறைமை செய்யப்படும் தகவல்களே முடிவு செய்வதற்காக (Decision Making) அல்லது பகுப்பாய்வு செய்வதற்காக (Analysis) பயண்படுத்தப்படுகின்றன.


பெரும்பாலும் தரவுகள் பதிவுசெய்யக்கூடிய உண்மைகளை குறிக்கிறது. இவை மேலே குறிப்பிடப்பட்டது போன்று முறைமை செய்யப்பட்டு தகவல்களாக மாற்றப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒரு வகுப்பிலிருந்து எல்லா மணவர்களினுடைய மதிப்பெண்கள் குறித்த தரவு எங்களிடம் இருந்தால், வகுப்பில் முதலாவது மாணவன், சராசரி மதிப்பெண்கள் குறித்து எம்மால் முடிவு செய்ய முடியும்.
ஒரு தரவை சேமித்து வைத்தல் (Store), மீட்டெடுத்தல் (Retrieve), தரவுகளை கையாளுதல் (Manipulate) மற்றும் தகவல்களை உருவாக்குதல் (Produce information) போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருள் தான் database management system  எனப்படுகிறது.

Users (பயனர்கள்)
பொதுவாக DBMS வெவ்வேறு உரிமைகள் மற்றும் அனுமதிகளைக் கொண்ட பயனர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் அதை வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். சில பயனர்கள் தரவை மீட்டெடுக்கிறார்கள். சில அதை காப்புப் பிரதி (Backup Copies) எடுக்கிறார்கள்.
பயனர்களை பொதுவாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்
  • End-Users
  • Administrators
  • Designers
(பயனர்கள் தொடர்பான விரிவான விளக்கம் அடுத்த பதிவில் பதிவிடப்படும்)

No comments

Powered by Blogger.