Operating System (Tamil) | Part 01


BIOS (Basic Input Output System)


கணினிக்கு மின் வழங்கப்பட்டவுடன் தொழிற்படும் அடிப்படை பணி செயன்முறை இதுவாகும்.

இது பின்வரும் பணிகளை ஆற்றும்
  1.  POST (Power On Self Test) பரீட்சித்தல்
    கணினி முறைமையின் அனைத்து வன்பொருட்களும் சரியாக தொழிற்படுகின்றதா என பரீட்சித்து பீப் ஒலியை எழுப்புதல்.

  2.  பூட்டிங் செய்தல் (Booting)
  3.  CMOS அமைப்பை கட்டுப்படுத்தல்

பணிசெயல் முறைமை (Operating System)

கணினி முறைமை ஒன்றின் சகல பௌதீகவியல் பாகங்களின் தொழிற்பாடுகளையும் முகாமை செய்து வழிநடத்துவதற்கு பாவிக்கப்படும் முறைமை மென்பொருளாகும்.

OS ஆனது வன்பொருட்களின் கட்டினத் தன்மையை மறைத்து பெயர் அளவிலான இயந்திரங்களாக கொள்வதன் மூலம் (Virtual Machine) கணினியை இலகுவாக பயன்படுத்துவதற்கான இடைமுகத்தை (Interface) ஐ வழங்குகிறது. அத்துடன் பயன்படு மென்பெருள் (System Software) மற்றும் பிரயோக மென்பொருள் (Application Software) ஆகியவை தெழிற்படுவதற்கு வசதி அளிக்கிறது.


 (அடுத்த பகுதியில் மேலதிக விபரங்கள் தொடரும்)

No comments

Powered by Blogger.