பரீட்சைக்கு தயாராவதற்கான 10 மந்திரங்கள் | அனுபவ உண்மைகள்

பொதுவாக பரீட்சைக்காலங்கள் நெருங்குகின்ற பொழுது மாணவர்களிடம் எழும் பொதுவான ஒரு கேள்வி தான் எப்படி படிப்பது? எவ்வாறு பரீட்சைக்கு தயாராகுவது? போன்றவையாகும்.
இத்தகைய கேள்விகள் எழுவதற்கு உளவியல் ரீதியன பல்வேறு காரணங்கள் இருந்தாலும் (அவற்றை பிரிதொரு பதிவில் அவதானிப்போம்) இந்தப்பதிவில் பரீட்சைக்கு தயாராவதற்கான 10 மந்திரங்களை அவதானிக்க இருக்கின்றோம். இவைகளை கடைப்பிடித்தால் பரீட்சையை கண்டு நாம் பயம் கொள்ளத்தேவையில்லை. தைரியமாக எதிர்கொள்ளலாம்.

10 மந்திரங்கள்

  1. சுயமாக கற்பதற்கான நேரத்தை ஒதுக்கு 

    மாணவர்கள் படசாலை, மேலதிக வகுப்பு என்று தங்கள் அதிக நேரத்தை செலவிடுவதால் சுயமாக மீட்டலுக்கான ஒரு நேரம் கிடைப்பதில்லை. ஆனால் சுய கற்றல் தான் பரீட்சையை இலகுவாக சித்தியடைய முதல் வழி.
  2.  நீங்கள் படிப்பதற்காக உங்களுக்கு பொருத்தமான இடமொன்றை உருவக்கிக் கொள்ளுங்கள்

    உங்கள் பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்புகளை பரப்புவதற்கு உங்கள் மேசையில் போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அறை போதுமான பிரகாசமாக இருப்பதையும், உங்கள் நாற்காலி போதுமான அளவு இலகுவாக அமைத்திருக்கிறதா என்பதையும் உறுதிசெய்வது கொள்ளுங்கள். இவை கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.  உங்களை திசைதிருப்பக்கூடிய விடயங்களை படிக்கும் இடத்தில் இருந்து அகற்றிவிடுங்கள். (சிலருக்கு அமைதியான சூழலில் படிக்க முடியும் என்றால் அதற்கான ஏற்பாடுகளையுமு் செய்து கொள்ளுங்கள்.)
  3. Use flow charts and diagrams

    ஒரு தலைப்பின் தொடக்கத்தில், இந்த விஷயத்தைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த அனைத்தையும் எழுதுங்கள். தேர்வுக்கு நெருக்கமாக, உங்கள் குறிப்புகளை ஒரு வரைபடத்திற்கு மாற்றுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இலகுவாக கற்ற விடயங்களை நினைவுக்கு கொண்டுவர முடியும்.
  4. கடந்தகால வினாத்தாள்களை செய்து பார்த்தல்

    இவ்வாறு செய்வது மிக முக்கியமான விடயமாகும். ஏனென்றால் இவ்வாறு செய்வதன் மூலம் வினாக்களின் மாதிரி வடிவம், வினாக்களில் எதிர்பார்க்கும் விடயம் போன்ற அறிய முடிவதோடு மனப் பயம் இல்லாமல் செய்யப்படுவதோடு நேரத்தை எவ்வாறு பயண்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
  5. உங்கள் விடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளல்

    இன்று மாணவர்களிடம் மருவி விட்ட அல்லது தவறாக புரியப்பட்ட விடயங்களில் ஒன்று தான் இது. ஏனென்றால் பிறருடன் கலந்துயைாடுகின்ற போது அல்லது பிறருக்கு சொல்லிக் கொடுக்கும் புாது நேரம் வீண்விரயம் செய்யப்படுகிறது என்ற தவறான கருத்து மாணவர்கள் மத்தியல் இருக்கின்றது. இது தவறான கருத்தாகும். பிறருக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் போது நாம் படித்த விடயங்களை நம்மால் மீட்டிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
  6. குழுவாக இணைந்து விளங்காதவற்றை விளங்க முயற்சித்தல்
  7. தொடர்ச்சியாக படிக்காமல் போதியளவு ஓய்வு எடுத்தல்

    இன்று மாணவர்கள் மத்தியில் காணப்படும் மிகவும் பிழையான செயற்பாடாகும். பரீட்சை நெருங்கி விட்டது என்பதற்காக தூக்கம் விழித்து உண்ணாமல் ஓய்வில்லாமல் படித்தல். ஆனால், உண்மை என்னவென்றால் இவ்வாறு படிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஏனென்றால் நமது மூளை ஒரு குறிப்பிட்ட சில நிமிடங்கள் மத்திரமே (அண்ணளவாக 45 நிமிடங்கள்) சிறப்பா செயற்பட முடியும். எனவே போதியளவு ஓய்வை நாம் மூளைக்கு வழங்குவதன் மூலம் நமது ஞபக சக்தியை திறம்பட மூளை வலுவூட்டும்.
  8.  ஆரோக்கியமான உணவுகளை உண்ணல்.

    இயற்கையான, சுகாதாரமிக்க உணவு வகைகளை அதிகம் உற்கொள்வதன் மூலம் உடலுக்கும், மூளைக்கும் தேவையான போசனைகளை ஒழுங்காக வழங்குவதன் மூலம் உடல் ஆரேக்கியம், மூளையின் சுருசுருப்பை தக்க வைத்துக் கொள்ளலாம்.
  9. பரீட்சைக்குரிய நாளை திட்டமிடல்

    பரீட்சைக்கான அனைத்து விதிகளையும் தேவைகளையும் சரிபார்க்கவும். உங்கள் பாதையையும் உங்கள் இலக்கை அடைய நீங்கள் எடுக்கும் நேரத்தையும் திட்டமிடுங்கள்.
  10. அதிகமாக நீர் அருந்துங்கள்

    படிக்கும் போதும், ஒரு பரீட்சையின் போதும் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லது. நீரேற்றம் எஞ்சியிருப்பது மிக முக்கியமானது ஏனென்றல் அது புத்துணர்சியுடன் கூடிய 
    positive mood உடன் மனதை பேணும்
இவற்றை ஒழுங்காக பேணுவதால் பரீட்சையில் வெற்றி பெறலாம் என்பது அனுபவத்தில் நாம் கண்ட உண்மை

அதேபோல், உங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு நேரசுசியை உருவாக்கவும், கடைசி நிமிடத்திற்கு எதையும் விட்டுவிடாதீர்கள்.

நன்றி.

8 comments:

  1. Now we have only 15 days so is it possible

    ReplyDelete
  2. Now we have only 15 days so is it possible

    ReplyDelete
    Replies
    1. ஆம் முடியும். மீதமுள்ள நாட்களை சரியாக திட்டமிட்டு இந்த நுட்பங்களையும் இணைத்துக் கொண்டால் சரி.

      Thanks for your comments. Keep in touch.

      Delete

Powered by Blogger.