Database Architecture | DBMS (Tamil) - Part 03

ஒரு DBMS இன் வடிவமைப்பு அதன் கட்டமைப்பில் தங்கியிருக்கும். இது மையப்படுத்தப்பட்ட (centralized) அல்லது பரவலாக்கப்பட்ட (decentralized) அல்லது படிநிலைப்படுத்தப்பட்டதாக (hierarchical) இருக்கலாம்.


ஒரு DBMS இன் கட்டமைப்பை ஒற்றை அடுக்கு (single tier) அல்லது பல அடுக்கு (multi-tier) என பிரிக்க முடியும்.. ஒரு n அடுக்கு கட்டமைப்பு முழு தொகுதியையும் தொடர்புடையதாக பிரிக்கிறது. ஆனால், சுயாதீனமான n தொகுதிகளாகப் பிரிக்கின்றது. அவை சுயதீனமாக மாற்றியமைக்கப்படலாம் அல்லது பிரதியீடு செய்யப்படலாம்.

ஒரு அடுக்கு கட்டமைப்பில், பயனர் DBMS உடன் நேரடியாக தொடர்புபட்டு அதை பயன்படுத்த முடியும். இக்கடமைப்பு முறையில் பயண்படுத்தும் போது செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் நேரடியாக DBMS இல் மாற்றத்தை ஏற்படுத்தும். இக் கட்டமைப்பு முறையின் போது பயனர்கள் பயன்படுத்த இலகுவாக அமையக்கூடிய எளிதான கருவிகள் இருக்காது. இதனால் பொதுவாக தரவுத்தள வடிவமைப்பாளர்கள் (Database Designers)  இக்கட்டமைப்பு முறையை பயன்படுத்துவர்.



இரு அடுக்கு கட்டமைப்பு என்றால்,
அதற்கு DBMS ஐ அணுகக்கூடிய ஒரு  Application இருக்க வேண்டும். இக்கட்டமைப்பு முறையை பெரும்பாலும் Programmers பயன்படுத்துகின்றனர். இங்கு பயன்பாட்டு அடுக்கு (application tier) ஆனது செயற்பாடு, வடிவமைப்பு மற்றும் நிரலாக்க அடிப்படையில் தரவுத்தளத்திலிருந்து முற்றிலும் சுயாதீனமாக உள்ளது.


(அடுத்த பகுதியில் 3-tier Architecture பற்றி ஆராயப்படும்)

No comments

Powered by Blogger.