What is Project Management? | Tamil


திட்டம் (Project) என்பது ஒரு தனித்துவமான தயாரிப்பு, சேவை அல்லது முடிவை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காலிக முயற்சி செயற்றிட்டம் எனப்படும்.


ஒரு திட்டம் தற்காலிகமானது எனவே அதில் வரையறுக்கப்பட்ட தொடக்க நேரமும் முடிவும் காணப்படும். ஆதலால், வரையறுக்கப்பட்ட நோக்கம் மற்றுமு் வளங்களே காணப்படும்.


அதேபோல் ஒரு திட்டம் என்பது தனித்துவமானது. இது ஒரு வழக்கமான செயற்பாடு அல்ல. ஆனால் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வடிவமைக்கப்பட்ட குறிப்பிட்ட செயற்பாடுகள் ஆகும். 

எனவே ஒரு திட்டக் குழுவில் பெரும்பாலும் ஒன்றாக செயற்பாடாத நபர்கள் அதேபோல் பல்வேறு அமைப்புக்களில் இருப்பவர்களும் பிரதேசங்களை சேர்ந்தவர்களும் உள்ளடங்குவர். 

அதேபோன்று உரிய நேரத்தில் பொருட்கள், சேவைகளை வழங்கள், பட்ஜெட் முடிவுகள், நிறுவனத்திற்கு தேவையான விடயங்களை வழங்கள் போன்றவற்றை திறமையாக நிர்வகிக்க வேண்டும். இதற்கக உருவாக்கப்பட்ட முகாமைத்துவம் தன் செயற்றிட்ட முகாமைத்துவம் எனப்படும். 

திட்டமிடல் முகாமைத்துவம் (Project Managment) என்பது தேவைகளுக்கு ஏற்ப அறிவு, திறன்கள், கருவிகள் மற்றும் நுட்பங்களை திட்ட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகும்.

இது முறைசாரா முறையில் நடைமுறையில் இருந்தது. ஆனால் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு தனித்துவமான தொழிலாக வெளிவரத் தொடங்கியது.

திட்டமிடல் முகாமைத்துவத்தின் செயன்முறைகளை ஐந்து வகைகளாக பிரிக்கின்றனர்.
  1.  முன்னெடுத்தல் (Initiating)
  2. திட்டமிடல் (Planning)
  3. செயற்படுத்தல் (Executing)
  4. கண்கானித்தல் மற்றும் கட்டுப்படுத்தல் (Monitoring and Controling)
  5. நிறைவு செய்தல் (Closing)

இவ்வாறு திட்டமிடல் முகாமைத்துவம் என்பது பாரிய பாடமாக விருத்தியடைகின்றது. இன்னுமொரு பகுதியில் மேலதிக விபரங்களை ஆராய்வோம்.

No comments

Powered by Blogger.