OS இன் வகைகள் | Operating System (Tamil) | Part - 03

பணி செயல்முறைமைகளை பின்வரும் வகைகளாக பிரிக்கலாம்.


1. தனி பயனர் (Single User), தனிப் பணி (Single Task) OS

ஏக காலத்தில் ஒரு நபர் மத்திரம் ஒரு பணியை மாத்திரம் செயற்படக்கூடிய பணிசெயல்முறைமை ஆகும்.

இதனை நிறுவுவதற்கு குறைந்த அளவு நினைவக இடம் போதுமானது.

Ex : DOS

2. தனி பயனர் (Single User), பற் பணி (Multi Task) OS

ஏக காலத்தில் ஒரு நபர் மாத்திரம் பல பணிகளை மேற்கொள்ளக் கூடியவாறு அமைந்தது.

Ex : Windows 10, Linux

3. பற் பயனர் (Multi User), பற் பணி (Multi Task

ஏக காலத்தில் பல நபர்கள் பல பணிகளை நிறைவேற்றக்கூடியவாறு அமைந்த பணிசெயன்முறைமை ஆகும்.

Ex : Servers

4. நிகழ்நேர (Real Time) OS

பயனர்களது வேண்டுகோளுக்கு  மிக வேகமாக பதில் அழிப்பதும், குறைந்த அளவான இயல்புகளை கொண்டதும், நிகழ்நேர பிரயேகங்களினை பயன்படுத்தக் கூடியதுமான இயக்க முறைமை மென் பொருள் இதுவாகும்.

இவை உட்பொதி முறைமை எனவும் அழைக்கப்படும். ஏனெனில் கணினிகளின் தாய்ப்பலகையில் நிறுவப்பட்டு இருக்கும். வழமை போன்று வன்தட்டில் நிறுவப்பட்டு இருக்காது.

உதாரணமாக வங்கிகளின் ATM இயந்திரங்களில் நிறுவப்பட்டு இருக்கும்.

5. தொகுதி செயற்படுத்தல் OS

பல தரவுகளை நினைவகம் ஒன்றில் சேமித்து பல தொழில்களாக பிரிப்பதன் மூலம் செயற்படுத்தப்படும் பணிசெயன்முறைமை இதுவாகும்.

உதாரணமாக சம்பள பட்டியல் மற்றும் அறிக்கை தயாரிப்பு உபகரணத்தில் பயண்படுத்தப்படும்.

6. பல் புரியாக்கம் (Multi thread) OS

ஒரு செயலி ஒரு பிரயோகத்தை பல உப பிரிவுகளாக பிரித்து ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கும்.

பற்பணியை நிறைவேற்றும் அனைத்து OS உம் இவ்வகையைச் சாரும்

7. நேரப்பகிர்வு (Time Sharing) OS

ஒரு செயலி ஏக காலத்தில் பல பிரயோகங்களை நிறைவேற்றக் கூடியவாறு அல்லது பல நபர்கள் ஒரு செயலியை பயண்படுத்தக் கூடியவாறு செயலியின் நேரத்தை பகிரும் பணிசெயன்முறைமை ஆகும்.



உங்கள் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை கொமண்ட் செய்யுங்கள்

No comments

Powered by Blogger.