Data Models | DBMS (Tamil) | Part - 05

Data models என்பது ஒரு தரவுத்தளத்தின் தருக்க அமைப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை வரையறுக்கிறது. அதேபோல் தரவு மாதிரிகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு இணைக்கப்படுகின்றன என்பதையும் அவை எவ்வாறு செயலாக்கப்படுகின்றன மற்றும் கணினியில் சேமிக்கப்படுகின்றன என்பதையும் வரையறுக்கின்றன.
முதலாவது தரவு மாதிரி flat data-models ஆகும், அங்கு பயன்படுத்தப்படும் அனைத்து தரவும் ஒரே சமதர பரப்பில் வைக்கப்பட வேண்டும். முந்தைய தரவு மாதிரிகள் அவ்வளவு விஞ்ஞான பூர்வமானதாக இருக்கவில்லை, எனவே அவை ஏராளமான நகல் (duplication) மற்றும் புதுப்பிப்பு முரண்பாடுகளை (update anomalies) தோற்றுவிக்கும் வாய்ப்பு காணப்பட்டது. எனவே இவற்றை நிவரத்தி செய்ய புதிய தரவு மாதிரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.


Entity-Relationship (ER) Model

Entity-Relationship (ER) Model என்பது real-world entities மற்றும் அவற்றுக்கிடையேயான உறவுகளின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. தரவுத்தள மாதிரியில் real-world entities ஐ உருவாக்கும் போது, ​​ER மாதிரி Entity set, Relationship set, General attributes மற்றும் Constraints போன்றவற்றை உருவாக்குகிறது.

தரவுத்தளத்தின் கருத்தியல் வடிவமைப்பிற்கு ER மாதிரி சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

ER மாதிரி பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டது

  • Entities மற்றும் அவற்றின் பண்புக்கூறுகள்.
  • Entities இற்கு இடையிலான உறவுகள்.


இந்த கருத்துக்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.


Entity - ஒரு ER மாதிரியில் உள்ள ஒரு Entity என்பது பண்புக்கூறுகள் எனப்படும். பண்புகளைக் கொண்ட ஒரு real-world entities எனலாம். ஒவ்வொரு பண்புகளும் டொமைன் எனப்படும். எடுத்துக்காட்டாக, School தரவுத்தளத்தில், ஒரு மாணவர் ஒரு Entity கருதப்படுகிறார். மாணவருக்கு பெயர், வயது, வகுப்பு போன்ற பல்வேறு பண்புகள் உள்ளன.

Relationship(உறவு) - Entity களுக்கிடைய உள்ள தர்க்கரீதியான தொடர்பு உறவு என்று அழைக்கப்படுகிறது. உறவுகள் பல்வேறு வழிகளில் நிறுவனங்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு Entity களுக்கிடையேயான தொடர்பின் எண்ணிக்கையை பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன.

one to one       (ஒன்றுக்கு ஒன்று)
one to many    (ஒன்றுக்கு பல)
many to one    (பலவுக்கு ஒன்று)
many to many (பலவுக்கு பல)


Relational Model

DBMS இல் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிரி தான் Relational Model ஆகும். இது மற்றைய மதிரியங்களை விட விஞ்ஞான பூர்வமானதாகும். அதேபோல் இது முதல்-வரிசை முன்கணிப்பு தர்க்கத்தை (first-order predicate logic) அடிப்படையகக் கொண்டதாகும். மேலும் ஒரு அட்டவணையை ஒரு n-ary உறவாக வரையறுக்கிறது.




இந்த மாதிரியின் முக்கிய சிறப்பம்சங்கள்

  • Data is stored in tables called relations.
    (உறவுகள் எனப்படும் அட்டவணையில் தரவு சேமிக்கப்படுகிறது)
  • Relations can be normalized.
    (உறவுகளை இயல்பாக்க முடியும்)
  • In normalized relations, values saved are atomic values
    (இயல்பாக்கப்பட்ட உறவுகளில், சேமிக்கப்பட்ட மதிப்புகள் அணு மதிப்புகள் எனப்படும்)
  • Each row in a relation contains a unique value
    (உறவின் ஒவ்வொரு வரிசையும் ஒரு தனித்துவமான மதிப்பைக் கொண்டுள்ளது)
  • Each column in a relation contains values from a same domain
    (உறவின் ஒவ்வொரு நெடுவரிசையும் ஒரே களத்திலிருந்து மதிப்புகளைக் கொண்டுள்ளது)

அடுத்த பதிவில் மாதிரியங்கள் தொடர்பாக விரிவாக அவதானிப்போம்.

No comments

Powered by Blogger.