அறிமுகம் | Java in Tamil | Part - 01
இந்த புதிய தொடரில் நாம் இன்றைய கணினி செய்நிரலாலர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற Java பற்றி தொடர்சியாக அவதானிக்க இருக்கிறோம். எனவே உங்களால் ஏனைய தொடர்களுக்கு வழங்கப்பட்டதை போன்று இதற்கும் ஒத்துழைப்பு வழங்குவீர் என்று எதிர்பார்க்கின்றோம்.
முடிந்தளவு கொமண்ட் பகுதியில் தொடர் சம்மந்தமான கருத்துக்கள், சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குங்கள். (தொடரச்சியான பதிவேற்றலுக்கு உறுதுனையாக அமையும்)
Java programming language முதலில் Sun Micro systems இனால் உருவாக்கப்பட்டது, இது ஜேம்ஸ் கோஸ்லிங் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது அதேபோல் 1995 இல் Sun Micro systems இனுடைய முக்கிய அங்கமாக Java platform (Java 1.0 [J2SE]) வெளியிடப்பட்டது.
Java Standard Edition இன் சமீபத்திய வெளியீடு Java SE 8 ஆகும். ஜாவாவின் முன்னேற்றj;jpd; fhuzkhf பல்வேறு வகையான தளங்களுக்கு ஏற்றவாறு பல வெளியீடுகள் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக: நிறுவன பயன்பாடுகளுக்கான (Enterprise Applications) J2EE, மொபைல் பயன்பாடுகளுக்கான J2ME என்பவற்றை குறிப்பிடலாம்.
புதிய J2 பதிப்புகள் முறையே Java SE, Java EE மற்றும் Java ME என மறுபெயரிடப்பட்டன. Java ஆனது Write Once, Run Anywhere எனும் கோட்பாட்டை கொண்டது. அதாவது எந்த Platform ஐ கொண்ட கணினியில் எழுதப்பட்டாலும் அதை எந்த வகை கணினியிலும் பயண்படுத்த முடியும் என்பதே. இதுவே Java அதிகம் பயன்பாட்ட காரணமாகியது.
மிகுதியை அடுத்த தொடரில் அவதானிப்போம். இத்தொடரில் நாங்கள் உள்ளடக்க வேண்டியவை மற்றும் உங்கள் கருத்துக்களை கொமண்ட் செய்யுங்கள். இனிவரும் காலங்களில் தொடர்சியாக காலை 10 மணிக்கு Java தொடர் பதிவேற்றப்படும்.

Thank you for the request and also want English addition also
ReplyDeleteThanks for your comments. We'll consider your suggestion in future. Keep in touch.
Delete