பரீட்சைக்கு செல்ல முன் உங்களுடன் சில நிமிடம்

A/L Exam
பரீட்சைக்குரிய காலம் நெருங்க நெருங்க மாணவர்களுடைய சிந்தனை தொடங்கி செயற்பாடுகள் அனைத்தும் பயத்தினால் தடுமாறுகின்ற ஒரு நிலையை எவ்வாறு தவிர்த்தல். மற்றும் பரீட்சை மண்டபத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். என்பன போன்ற வழிகாட்டலை வழங்கவே இப்பதிவை பதிவேற்றுகின்றோம்.
1. மீதமுள்ள காலத்தை சுயமாக கற்பதற்கு மாத்திரம் ஒதுக்கி கொள்ளுங்கள்.
முடிந்தால் நேரசுசி ஒன்றை பேணுங்கள்.

2. அதிகமாக பயிற்சிகளை செய்து உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்

3. உங்கள் சந்தேகங்கள் தவிர பிறரிடம் ஆலோசனைகள் கேட்காதீர்கள். ஏனெனில், பரீட்சை நெருங்குகிறது என்பதால் அது மேலும் உங்களை குழப்பமடையச் செய்யும் .

4. உங்களுக்கான கற்றல் முறையிலேயே (பாணியிலேயே) கற்றுக் கொள்ளுங்கள். புதிய முறைகளை கையாளாகாதீர்கள்.

5. பொருத்தமற்ற உணவுகளைத் தவிர்த்து கொள்ளுங்கள்.

6. தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

7. பரீட்சைக்கு முதல் நாள் நேரகாலத்துடன் தூங்கி அதிகாலையில் விழத்தெழுங்கள். முடிந்தளவு நேரகாலத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லுங்கள்.

8. பரீட்சைக்கு சென்ற பின் அங்கு பாடங்களை படித்துக் கொண்டிருக்க வேண்டாம். முடிந்தளவு மனதை மகிழ்வாக வைத்திருங்கள். அவசியம் என்று கருதினால் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து நண்பர்களுடன் கதைத்திருங்கள். ஏனென்றால் அது மனதை பதற்றமடைவதை விட்டும் தடுக்கும்.

9. பரீட்சை மண்டபத்தில் பிறரிடம் உதவி கேட்கவோ பிறருக்கு உதவி செய்யவோ வேண்டாம்.

10. பரீட்சை வினாக்களை தெளிவாக விளங்க முயற்சி செய்யுங்கள். அதன் பின்னர் பதில் அளிக்க முயற்சியுங்கள்.

11. தங்களுக்கு அதிகம் பரீட்சயமன இலகுவான வினாக்களுக்கு முதலில் விடையளியுங்கள்.

12. வினா இலக்கங்களை தெளிவாக குறிப்பிடுங்கள். வினா இலக்க ஒழுங்கில் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை.

13. தெளிவான கையெழுத்தில் எழுதுங்கள். பழக்கப்படாத புதிய வகை பேனைகளை பாவிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள். அதேபோல் போதியளவு இடைவெளிவிட்டு எழுதுங்கள்.

14. பரீட்சை மண்டபத்தினுள் உங்களுக்கு தேவையான குடிநீர் தொடக்கம் அனைத்தையும் வைத்திருங்கள்.

15. பரீட்சை முடிந்தவுடன் தாமதியாது வீடு திரும்புங்கள்.

16. பரீட்சை முடிவடைந்தவுடன் முடிவடைந்த வினாத்தாள் தொடர்பாக கலந்துரையாடுவதை முற்றாக தவிர்ந்து கொள்ளுங்கள்.

17. விடைத்தாள்களை மேசைக்கு கீழே வைக்க வேண்டாம். விடை எழுதிய அனைத்து விடைத்தாள்களையும் ஒழுங்காக வைத்து பரீட்சை முடிவடைய 10 நிமிடங்களுக்கு முன்னரே கட்டிவிடுங்கள்.

18. இறை வணக்கங்களில் பொடுபோக்கு காட்ட வேண்டாம்.

19. கற்பித்த ஆசிரியர்களின் நல்லாசியை பெற்றுக் கொள்ளுங்கள்.

20. இறுதியாக முக்கியமான ஒன்று.

நம்பிக்கையோடு பரீட்சை மண்டபத்தை நோக்கி செல்லுங்கள். பாதி வெற்றி பெற்றதாகிவிடும்.

No comments

Powered by Blogger.